பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34

படித்தவன் சூதும் பாபமும் செய்யக் கூடாது

சாத்திரம்வளருது: சாதி குறையுது. நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது. வேறென்ன வேண்டும்?)

வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்கார: புறப்பட்டிருக்கிருன். உடுக்கைத் தட்டுவதிலே முப்ப தைந்து தாள பேதங்களும், அவற்றிலே பல விந்நியாச களும் காட்டுகிருன். தாள விஷயத்திலே மஹா கெட்டி காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண் போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளை சட்டை போட்டுக்கொண்டிருக்கிருன். தலையிலே சிவப்பு துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிரு கிருன். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டை யிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிே பெரிய குங்குமப் பொட்டு, மீசையும் கிருதாவுமாக மிகவு விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்து கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிரு கிறது. ஆள் நெட்டை, தடியன். காலிலே ஹைதராபா ஜோடு மாட்டியிருக்கிருன். நேற்றுக் காலையிலே, அவ. நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்கார வேலை செய்வது போலச் செய்கிருன்,நல்ல கெட்டிக்காரன் அவன் சொன்னன் : -

“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு: நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது: சொல்லடி, சொல்லடி, சக்தி மாகாளி, வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு: தரித்திரம் போகுது, செல்வம் வருகுது: படிப்பு வளருது பாவம் தொலையுது