பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36

பத்து வயதாக இருக்கும் போது தஞ்சாவூருக்கு என் தகப்பனரி என்னை அழைத்துக் கொண்டு போனர். அங்ே வைசூரி கண்டு செத்துப்போய் விட்டார். பிறகு நான இதே தொழிலில் ஜீவனம் செய்து கொண்டு பலதேசங்கல சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன் அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்ே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன் அவன் ஒரு கம்பெனி ஏஜெண்டு. இந்தியாவிலிருந்து தாசிகள், நட்டுவர், கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாள் களைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போய் வெள்ளைக்காரர் தேசங்களிலே, பல இடங்களில் கூடார். மடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினல் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருச் கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது மேற்படி கம்பெனி கலைந்து போய்விட்டது. எங்களுக் கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும் படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆன அ! பூர்வீகத் தொழிலைக் கைவிடுவது ஞாயமில்லை என்று நினைத்து, இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி இதே தொழில் செய்து வருகிறேன்.

ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போல வீண்பொழுது போக்காமல் அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன் எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாலை களும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன்