பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மிளகாய்ப்பழச் சாமியார்

(குறிப்பு : இது கதைக் கொத்து என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது, பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் இதை எழுதியிருக்கிறார். கதைக் கொத்தில் உள்ள க ைத க ள் எல்லாவற்றிலும் பாரதியாரின் தன்னிணைப்பு அநேகமாக இருப்பதைக் காண லாம். சிறுகதை என்ற துறை கவிஞர் காலத்தில் தமிழில் நன்கு வளர்ந்தோங்க வில்லையாயினும், இக்கதைகள் சுவையானவை; தனிப்போக்கு உடையவை என்பதில் ஐயமில்லை.

மக்களுடைய மடமை, மூடபக்தி, பெண் களின் நிலைமை, ஜாதி சமயச் சண்டைகள் போன்றவற்றைக் கதைகளின் வாயிலாக எடுத் துக்காட்டி,அவற்றை மாற்றப் பாரதியார் முயற்சி செய்கிரு.ர்.

மிளகாய்ப் பழச்சாமியார், கவிஞருடைய உள்ளத்திலிருந்த பெண்கள் விடுதலைபற்றிய சிந்தனைகளையே எடுத்துரைப்பதாகக் காண்கிறது.

பெண்கள் முன்னேற்றம்பற்றி 1905-9ஆம் ஆண்டில் சிறிதுகாலம் சக்கரவர்த்தினி என்ற மாசிகைக்கு பாரதியார் ஆசிரியராக இருந்த காலத்திலேயே கொண்டிருந்த எண்ணங்களே இதில் வெளியாகின்றன. தொடக்கத்திலேயே பெண்களை உயர்த்தவேண்டும் என்று, திட்ட வட்டமான கொள்கை உடையவர் என்பது பெரிதும் கவனிக்கற்பாலது.)