பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

நான் இந்த மிளகாய்ப்பழச் சாமியாருடைய கோயி லுக்குப் பலமுறை போய் வேலைக் கும்பிட்டிருக்கிறேன். இன்று காலை இந்த ஸ்திரீ என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தாள். வந்து கும்பிட்டாள்.

“எதன் பொருட்டு கும்பிடுகிறீர்?” என்று கேட்டேன் எனக்குத் தங்களால் ஒரு உதவியாக வேண்டும் என்றாள்.

என்ன உதவி?’ என்று கேட்டேன்.

‘பெண் விடுதலை முயற்சியில் எனக்குத் தங்களால் இயன்ற ஸ்காயம் செய்யவேண்டும்” என்றாள்.

“செய்கிறேன்’ என்று வாக்குக் கொடுத்தேன்.

அப்போது அந்த மிளகாய்ப்பழச் சாமியார் பின்

வருமாறு உபந்யாஸம் புரிந்தாள்:

‘ஹா. ஹா, பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் போதுமடா போதுமடா, போதும்!

உலகத்திலே நியாயக் காலம் திரும்புவதாம். ருவியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய் விட்ட தாம்.

ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்.

உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லு:

கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை.