பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

அடித்து நசுக்கக்கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்யவேண்டும். உங்! ளுக்குப் பராசக்தி நீண்ட ஆயுளும் இஷ்ட காம்யசித்திகளும் தருவாள் என்று, அந்த மிளகாய்ப்பழச் சாமியா சொன்னாள். சரியென்று சொல்லி நான் அந்த தேவிக்கு வந்தனம் செய்தேன். அவள் விடை பெற்றுக்கொண்டு சென்றாள்.

12. மூட பக்தி

(குறிப்பு : பாரதியார் இரண்டாம் முறை யாக சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக அமர்ந்து பணி புரி ந் து கொண்டிருக்கிறார், பாண்டிச்சேரியிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து, கடயத்தில் சிறிது காலம் தங்கியிருந்து, பிறகு தான் சென்னைக்கு வந்து மித்திரனில் பணிபுரி கின்றார், அவர் அக்காலத்தில் திருவல்லிக்கேணி தெளிசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் குடியிருக்கிரு.ர். அருகிலே மற்றாெரு வீதியில் மண்டயம் ஸ்ரீநிவாசாசாரியார் தமது இல்லத் தில் வசித்து வருகிரு.ர்.

ஒருநாள் காலை முகrவரம் செய்துகொள்ளு வதற்காக பாரதியார் ஸ்ரீநிவாசாசாரியரின் இல்லத்திற்கு வந்து தமது வேலையைத் தொடங் குகிரு.ர்.

ஸ்ரீமதி யதுகிரி அம்மாள் வேடிக்கையாக “மாமா, உங்கள் வீட்டில் கூடிவரம் செய்து கொள்ள இடமில்லையா?” என்று கேட்கிரு.ர்.