பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

பாரதியார் சொல்லுகிறார்: “இடமிருக் கிறது. ஆனல் இந்த நாள் கூடிவரம் செய்து கொள்ளச் சரியான நாளல்ல என்று மனைவி செல்லம்மா சொன்னாள்: அதனால் இங்கே வந்தேன்’ என்கிரு.ர்.

இந்தச் செய்தியை “பாரதி நினைவுகள்’ என்ற தமது நூலில், யதுகிரிஅம்மாள் அவர்களே எழுதியுள்ளார்கள். சுவையான நூல் அது.

இவ்வாருகப் பல மூட நம்பிக்கைகளை பாரதி யார் இக் கட்டுரையிலே சாடுகிரு.ர்.

ஆங்கிலம் படிப்பதால் மட்டும் இவ்வித மான மூடநம்பிக்கைகள் மறையும் என்று கவிஞர் நம்பவில்லை. தாம் ஆங்கிலக் கல்வி கற்றதால் உண்டான பயனைப்பற்றி, “செலவு தந்தைக் கோராயிரம் சென்றது; தீதெனக்குப் பல்லாயிரம் நேர்ந்தன” என்று கூறுகிரு.ர்.

ஆங்கிலக் கல்வியால் பயன் உண்டு என்ப தைப் பாரதியார் மறுக்கவில்லை. கல்விமுறை கற்றவற்றின்படி நடக்கக்கூடிய தைர்யத்தைக் கொடுக்கவில்லை என்பதே அவருடைய குற்றச் சாட்டு.

பந்தி போஜனம் என்ற காரணத்தைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனல் ஆங்கிலக் கல்வி பல குருட்டு நம்பிக்கைகளை அகற்றுவதற்கு வேண்டிய துணிச்சலேக் கொடுக்கவில்லை;இன்றும் கூடக் கொடுக்கவில்லை என்பதையே கருத வேண்டும்.)