பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம்வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடை யாது. இதல்ை நம்மவர்களின் காரியங்களுக்கும் விவகாரன் களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.

இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச்செய்திகளுக்கும் நாள், நகத் திரம், லக்னம் முதலிய பார்த்தல். rவரம் பண்ணிக் கொள்ளவேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பகடிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. கூடிவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனிக் கலியாணங் கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப் பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத் துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்க மும் கார்யங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டா கின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்ய நஷ்டம் மட்டுமன்றி, மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.

‘காலம் பணவிலை உடையது’ என்ற குறிப்புடைய் இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதனல் பண லாபம்