பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ன்யக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்க குடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக் கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிரு.ர்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் கள். நம்மைக் கண்டாலும் ஆண்மக்கள் நிஷ்காரணமாய் சீறி விழுகிறார்கள்; காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிரு.ர்கள். நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக் கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பது போல், நம்மை விலைக்கு விற்கிறார்கள். தம்முடைய நூல் களிலும் லம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் துாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக் கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சி யிருக்கிருேமெனினும், இந்த நிலை மிக இழிவானதென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டிய தென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?

தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலி யாட்களுக்கு ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்த வழி காட்டினரோ, அதுவே நமக்கும் வழி. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளேயரை ஹிந்துக்கள் ஆயுதபலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி வெடிகுண்டு முதலிய வற்றை உபயோகிக்க விரும்பின சில இளைஞரைக்கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்துவிட்டார். ‘அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை