பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்திரம் வேண்டும் என்று கேட்டால், அதை பெரும்பான்மையான ஐரோப்பிய ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துg பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போல நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.

‘விஷ்ணுபக்தி யுடையோர் எந்தக் குலத்தோ ஆயினும் எல்லா வகையிலும் ஸ்மானமாகப் போற்று வதற்குரியர் என்பது ஸ்ரீ ராமானுஜாசார்யருடைய பரமசித் தாந்தம்” என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர் கள், பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக் கூட விடாமல் வீண்சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.

“எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையால் உணர்த்திய உண்மையையும் “எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன் என்று கண்ணபிரான் அதே கீதையிற் சொல்லிய கொள் கையையும், வேதோபநிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள், உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதிவேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.

“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலோ

வன்சொல் வழங்கு வது’ என்ற குறளின்படி, இனிய சொற்கள் சொல்வன் னின்றும் நன்மைகள் விளைவது கண்டும், மானிட ஒருவர்க் கொருவர் கொடுஞ் சொற்கள் வழங்குவது மடைமை’ என்பது உலகத்தில் சாதாரண அனுபல