பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75

Eடிருக்கின்றன. அதிலும், தற்கால யுத்தங்களோபல பல துறைகளில் மிகச் சிறந்த அறிவுத் தேர்ச்சி கொண்ட தண்டிதர்களாலே நடத்தப்படுகின்றன.

வியாபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதான நெறி அளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம் ாக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக் இறது. இக் காலத்தில் இவை புத்தித் திறமையில்லாமல் ப்ோல்ை ஒரு rணங்கூடத் தரித்து நிற்கமாட்டா.

இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகால முதல் அறிவு ரயிற்சியுடைய வகுப்பினர் கைத்தொழிலாளிகளுக்குக் கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்துகொண்டு வந்திருக் கிறார்கள். ‘எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும் தொலை வில் விலக்கிவிட வேண்டும்” என்ற விநோத விதியொன்று மனுஸ்ம்ருதியிலே காணப்படுகிறது. நம்முடைய தேசத்தில் நட்டுமேயன்று, உலகமுழுமையிலும், எல்லா நாடுகளிலும் கைத்தொழிலாளருக்கு கல்விப் பயிற்சி உண்டாகாத நுண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக் கின்றன.

ஆனால், இந்த சூழ்ச்சியை மீறி, எல்லா நாடுகளிலும், முக்கியமாக, நமது பாரததேசத்தில், கைத்தொழில் புரியும் கூட்டங்களைச் சேர்ந்தோரில் பற்பலர் கல்வித் தேர்ச்சி படைந்து வந்திருக்கிறார்கள். ஆனல், இங்ஙனம் கல்விப் பயிற்சி வாய்ந்தோர் பெரும்பாலும் தம்முடைய பரம்பரைத் தொழில்களில் இறங்காமல், சுத்த இலக்கியப் பயிற்சி லேயே வாழ்நாள் கழிப்பாராயினர்.

எனினும், சென்ற ஒரிரண்டு நூற்றாண்டுக்குள்ளே: ஐரோப்பாவில், எல்லா வகுப்பினருக்கும் கல்வி பயிற்றும் முறைமை தொடங்கி வந்திருக்கிறது. இந்த ஸர்வ.ஜனக் ல்வியென்னும் கொள்கை ஐரோப்பாவிலிருந்து உலகத்தின்