பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ஐரோப்பிய தொழிற் கூட்டத்தாரிடையே தொழிலற்ற வராய் வருந்திய ஜனங்களின் தொகை மேன்மேலும் குறையலாயிற்று. எனினும், தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட ககதி பேதங்கள் தீரவில்லை; அவை மிகுதிப்பட்டுக் கொண்டே வந்தன. இதற்குக் காரணம் அங்கு தொழிலாளருக்குள்ளே சங்க சக்தி அபாரமாக அதிகப்பட்டுவிட்டது. ஒவ்வொரு ஆலையிலும் பதியிைரம் லக்ஷக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்தனர். இவர்களுக்குள்ளே பலர் கல்வி கற்றேர் ஆயினர்.

இதனிடையே மேற்கூறப்பட்ட ஸ்மத்துவக் கொள்கை அதாவது, குற்றங்களுக்கு தண்டனை விதிப்பதில், செல்வருக் கும் எளியோருக்கும், மேற்குலத்தாருக்கும் கீழ்க்குலத்தா ருக்கும், சட்டம் ஸ்மானமாக வேலை செய்ய வேண்டுமென் றும், உணவு முதலிய ஸெளகரியங்களிலும் லெளகீக மரியாதைகளிலும் மானுடருக்குள்ளே எக்காரணம்பற்றி யேனும் யாதொரு வேற்றுமையும் நடைபெறக்கூடாதென் றும், உலகத்தில் எல்லாமனிதரும் எல்லா வகைகளிலும் ஸ்மானமாவாரென்றும் ப்ரான்ஸ்தேசத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுச்சிபெற்று நாட்பட நாட்பட ஐரோப்பா முழுதிலும் வியாபித்துக்கொண்டு வந்ததொரு கொள்கை தொழிலாளரிடையே மிகுதியாகப் பரவலாயிற்று. அதன் மேல் இத்தொழிலாளர் “நாம் பாடுபட்டு உற்பத்தி செய்யும் பொருள்களை விற்று இந்த முதலாளிகள் இத்தனை பணம் ஸம்பாதிக்கிறார்கள். நாமோ பெரும்பாலும் குடியிருக்கக் குடிசைகளும் சாக்கடைகளும் தின்பதற்குப் பழைய ரொட்டியும் பழைய மீனுமாகவாழ்ந்து வருகிருேம், இவர்கள் மாளிகைகளில் வாழ்ந்து குபேரஸம்பத்தை அனுபவிக்கிறார்கள். இது ஸ்மத்துவக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இவர்கள் முதல் போட்டார்