பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கடலின் கரை கடந்தவகை நினைத்துக் கொண்டிருக்கிருய்! உன்னைப்போல் இங்கிலீஷ் படியாத மற்ற ஜனங்கள் தமிழ்ப் பாஷையை எப்படிக் கைவிட முடியும்? ஒரு பாஷையை நீ மரக்கிளை என்று நினைத்துக் கொண்டிருக் கிருயா? அதை ஜனங்கள் பிடித்துத் தொத்திக்கொண்டு விட மாட்டோம் என்கிருர்களென்று எண்ணுகிருயா? மனுஷ பாஷைகள் மனுஷ வாழ்க்கையோடு ஒட்டி உடன் வளர்ந்த பொருள்களல்லவோ? தலைமுறை தலைமுறையாய் எத்தனையோ நூற்ருண்டுகளாக ஒரு நாட்டார் பேசி வரும் பாஷை அவர்களின் உயிரோடு ஒன்றி விடுகின்றது. மனித அறிவு வளர்ச்சிக்குப் பாஷை ஒருகண்ணுடி. ஒரு நாட்டாரின் அறிவு வளர்ந்துகொண்டு வரவர அந் நாட் டின் பாஷையும் விசாலம் அடைந்து வருகிறது. அன்னிய ராஜாங்கம், தாரித்திரியம், சரீரபலக் குறைவு, நோய், உற்சாகமின்மை முதலிய காரணங்களால் இப்போது இழிவு கொண்டு போயிருக்கும் தமிழ் நாட்டு ஜனங்கள், ஆங்கிலேயர் முதலிய சுதந்திர நாட்டாரைப் போல் விருத்தி அடைந்து வருதல் அசாத்தியமாக இருக்கிறது என்பது ஒருவாறு மெய்யாக இருக்கலாம். அதற்குப் பாஷையைக் குற்றம் சொல்வதிலே என்ன பிரயோஜனம் இருக்கிறது? ஆடத் தெரியாத தாசி கூடம் போதாது” என்பது போலக் கதை சொல்லுகிருயே? வா - போமையா! பொதுப்படையாகப் பேசிக் கொண்டு போவதிலே என்ன பயன் இரு க் கி ற து? இப் போது ஐரோப்பியர்கள் பூமி நூல், கடல் நூல், பிராணி நூல், அணு நூல் முதலிய நூல்களிலே எல்லாம் அளவு கடந்த முதிர்ச்சி பெற்றிருக்கிருர்கள். மின்சாரம், காந்தம் இவற்றின் குனதிசயங்களைப் பற்றி நவீன ஆராய்ச்சி வரம்பு இல்லாதிருக்கிறது. மின்சாரம், நீராவி, என்பவற்றைத் துணையாக வைத்துக்கொண்டு மனித