பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I02 நினைத்துப் பார்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. அப் பாட்டைக் கேள்: "மெய்த் திருப்பதமேவென்ற காலையும் இத்திருத் துறந் தேகென்ற போதிலும் சித்திரத்தி லலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கு முகத்தினை யுன்னுவாள்' (பாடலின் பொருள் சொல்லுகிரு.ர்.) பார்த்தாயா? இதிலே என்ன ஓசை நயமும், சொல் நயமும், பொருள் இன்பமும் மலிந்து கிடக்கின்றன. இதை உனக்கு ஒரு திருஷ்டாந்தமாகச் சொன்னேன். இவ்வாறு கம்ப ராமாயணத்திலே ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் செறிந்து கிடக்கின்றன. மாம்பழம் அழுகி இருக்கும்போது தின்று பார்த்தவன் பொதுப்படையாக மாம்பழமே கெட்ட பொருள் என்று நிந்திப்பது போல, தமிழ்ப்பாஷை யும் தமிழர்களும் பதனம் அடைந்து போயிருக்கும் இந்தக் காலத்தைக் கவனித்து விட்டு நீ பாஷையையே குற்றஞ் சொல்லுவது நியாயமன்று. மஹரிஷி பால கங்காதர திலகர் முதலிய மஹான்கள் சொல்லும் வழிகளைப் பின் பற்றி நமது நாடு செல்வமும் பெருமையும் சுதந்திரமும் பெற்ற பிறகு, நமது பாஷை இருக்கும் மாதிரியைப் பார்த் தால் அப்போது ஆச்சரியம் அடையத் தக்க விதமாக இருக்கும்.