பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழன் தூங்கிக் கொண்டிருந்தான். கும்பகர்ணத் துரக்கம். தாழ்வு மனப்பான்மையாலும், சோர்வாலும் தமிழன் தலைகுனிந்து உறங்கிக் கொண்டிருந்தான். தமிழகத்தின் பெருமையை அவன் உணர்ந்து கொள்ள வில்லை. தமிழின் உயர்வை அவன் அறிந்து கொள்ளவில்லை. மேற்கு மொழிகளின் ஆதிக்கத்திலே அவன் கட்டுண்ட பாம்பெனக் கிடந்தான். தலைவர்கள் என வந்தவர்கள் ஆங்கிலம் பேசுவதையே நாகரிகம் என்று கொண்டார்கள். ஆங்கிலேயனைவிட ஆங்கிலத்தைத் தமிழன்தான் திருத்தமாக உச்சரிக்கிருன் என்று பெருமைப்பட்டார்கள். ஆங்கிலம் படித்தவனுக்கு அதிகாரம். ஆங்கில நடை உடை பாவனைகளைக் கைக் கொள்வதிலே ஒரு தனிப்பட்ட மோஹம்; அதற்கே தலைவணக்கம்.