பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

It).9 கிராமப் பள்ளிக் கூடங்கள் அனவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத் தை வாரி இறைக்கிருர்கள். கான்பரன்ஸ் என்றும், மீட்டிங் என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்திை சொல்லுகிருர்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிருர்களே! படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொல்லு கிருர். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற்பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒருவழி பிறக்க வில்லையே! ஏன்? எதேைல? காரணந்தான் என்ன? ஜாதி என்ற சொல் இரண்டு அர்த்த முடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு; வேளாள ஜாதி பிராமண ஜாதி, கைக் கோள ஜாதி என்பது போல. இரண்டாவது தேசப்பிரிவு கள் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி பாரஸிக ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி ருமானிய ஜாதி என்பது போல. இவ்விரண்டிலும் அதிக அது கூலமில்லை யென்பது ரீமான் ரவீந்திர நாத தா கூருடைய ககதி, வெளி தேசத்தாருக்கு தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே, அளுவசியமாக ஜாதி விரோதங்களும் அன்புக் குறைவுகளும் அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமை யன்றே?