பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஸரஸ்வதி பூஜை-உண்மை வழி (ിഴു ஸாதாரணமாக நினைத்துவிட லாகாது. உண்மைச் சொல் rேம மந்திர மாகும். பொய்ச்சொல் அழித்துவிடும். "வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.' இவளை அறிஞன் தனக்குள்ளே ஞான வெள்ளமாகக் காண்கிருன். அவனுடைய அறிவு கதிர் விடுகின்றது. இவளுடைய பூஜைக்கு முக்கிய் வழிகள் எவை? தான் எப்போதும் எவ்விடத்திலும் உண்மை சொல்லுதல், பிறர் உண்மை சொல்வதை எப்போதும் எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் என்ற இவ்விரண்டுமேயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய் விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது நாராச வாணமாய்விட்டது. ஸாதாரண நிலையில், மனித வாழ்க் கை அத்தனை கோணலாகி விட்டது; மனித அறிவு அவ்வளவு குழப்பமடைந்து நிற்கின்றது. தேவ வாக்கு அவதாரம் : ஸரஸ்வதி வேத மார்க்கமாகிய வேள்வியின் ரஹஸ்யப் பொருளை உணர்ந்து நடந்தால், உண்மை சொல்வதிலும் துன்பமிராது; கேட்பதிலும் துன்பமிராது. உலக வாழ்க் கையே தேவருக்குச் செய்யப்படும் வேள்வியல்லவா? அதனை ஸரஸ்வதியே தரிக்க வேண்டு மென்று மதுச்சந்த ரிஷி வேண்டுவதை மேலே கண்டோம். உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக் கொடுப்பதற்கு முக்கிய வழி யென்ருேம். இதனுடன் நிந்தை, பழி, சாபம், பயம், அசுசி- இவற்றிஞல் வாக்கை