பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. வீரத் தாய்மார்கள் 18, அக்டோபர் 1907 "தாயைப்போல் பிள்ளை' : ஒர் தேசத்தார் ஞானமும், செல்வமும், வீரமும், புகழும் கொண்டு உன்னத நிலையிலே இருக்கும்போது, அவர்களுக்குள் ஆண் மக்களிடம் மட்டுமே யல்லாது பெண் பாலரிடத்திலும் கூடத் தர்மாபிமானமும், வீரத்தன்மையும் சிறந்து விளங்கும். ராஜபுத்திரர்கள் உன்னத நிலையிலே இருந்த காலத்தில் ராஜபுத்திர ஸ்திரீகள் காட்டிய வீர குணங்கள் இன்றுகூட உலகத்தாரெல்லாம் கேட்டு மெய் சிலிர்க்கும்படியாக இருக்கின்றன. யுத்த காலங்களில் ராஜபுத்திர ஸ்திரீகள் தமது உயிரைப் புல்லி னும் சிறிதாக மதித்து, மானத்திற்காகவும், தர்மத்திற்காக வும், கற்பிற்காகவும் செய்திருக்கும் வீரச்செயல்கள் எண்ணி முடியாதன. டாட்' என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் ராஜஸ்தான சரித்திரத்தை வாசித்தவர்களுக்கு நமது பாரத நாட்டு கடித்திரிய மாதர்களுக்கு நிகரான வீரத்தாய் மார் உலகத்தில் வேறெங்குமிருந்ததில்லை என்பது நன்கு விளங்கும். நிற்க நமது தமிழ் நாட்டிலேயும் அத்தகைய பெருங்குடி (மூதில்) மாதர்கள் இருந்திருக்கிருர்களென்பதைச் செந் தமிழ்’ப் பத்திரிகாசிரியர் இம்மாதம் எழுதியிருக்கும் ஒர் திவ்யமான உபந்தியாசத்திலே பல அரிய திருஷ்டாந்தங் களால் விளக்கியிருக்கிரு.ர். அவரது உபந்தியாசத்தைச் சென்ற வாரத்திலே ஒருபகுதியும் இவ்வாரத்தில் ஒரு பகுதி யுமாக நமது பத்திரிகையிலே பிரசுரம் செய்திருக்கின்ருேம். இன்னும் சிறிது மிஞ்சியிருக்கின்றது. இதனை அடுத்த