பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II6 "மகனைப் பெற்று விடுதல் எமது கடமை. அவனைத் தக்கோன் ஆக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்கு வேல் செய்து கொடுத்தல் இரும்புக் கொல்லனது கடமை. என் மகனது கடமை எனிலோ யுத்தத்திலே சென்று யானையைக் கொன்று மீளுதல் ஆகும்" என்று ஒர் தமிழ்த்தாய் பாடியிருக்கின்ருள். இனி மற்ருெரு தாய், "எனது மகன் யுத்த களத்திலே போர் வீரர் வாளினிலே கழுத்தறுப்புண்டு மடிவானல்ை , அதுதான் எனக்கு மேலான தர்மம்; அதுவே ஸத்கர்மம்’ என்று பாடினள். பின்னுமொரு பெண் புலவர், தமது சுற்றத்திலுள்ள ஓர் அம்மை தன்மகன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் இறந்தான் என்று கேள்வி யுற்று, தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சி யைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்த சிறப்பைக் கண்டு வியந்து பாடல் சொல்லியிருக்கின்ருர். அப்பால், ஒரு தமிழ்த்தாய் தனது தந்தையும் கணவ னும் போரிலே சிறிது காலத்திற்கு முன்பு இறந்து போயிருக் கவும், யுத்தப் பறையின் ஒலி கேட்டவுடனே சந்தோஷம் மிகுந்து, தன் மகனுக்கு நல்ல ஆடை யுடுத்தி, அவன் குடுமிக்கு எண்ணெயிட்டுச் சீவி முடித்து அவன் கையிலே வேலெடுத்துக் கொடுத்துத் தனது ஒரே பிள்ளையைப் போர்க்களத்திற்குப் போ என்று அனுப்பிய பெருமையை ஓர் பெண் புலவர் வியந்திருக்கின்ருர். பின்னுமொரு தாய், தன் மகன் யுத்த களத்திலே வலியிழந்து புறங்கொடுத்து ஒடியது உண்மையாயின், "அவன் பால் உண்டு வளர்ந்த தற்குக் காரணமாயிருந்த என் முலைகளை அறுத்திடுவேன்' என்று வாளைக் கையிலே கொண்டு போர்க்களத்திற்குப் போய், அங்கே வீழ்ந்து கிடக்கும் பிணங்களை வானில்ை புரட்டித் தேடுகையிலே, அப் பிணங்களினிடையில் தன்