பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 சக்கரம் சுழலவே செய்கின்றது; அச் சுழற்சியிலே, சிறுமைச் சேற்றில் ஆழ்ந்து கிடந்த நீச பாரதம் போய் 'மஹா பாரதம் பிறக்கும் தறுவாய் வந்துவிட்டது. "தாழ் நிலை என்ற இருளிலே மூழ்கிக் கிடக்கும் பாரத வாலிகளுக்கு மஹாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப் பொன்ருகும். அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க, ஒம்! ஸி. சுப்பிரமணிய பாரதி. குறிப்பு:-gஅழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன் காலேஜ்) அவர்களும் அவர் தம்பி பூரீகிருஷ்ணமாசாரி யாரும் தங்களுக்கு ஸாஷ்டாங்க வணக்கம் கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.