பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ŽE தமிழில் உள்ள கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய வற்றைப் படித்து அவற்றின் சிறப்பை அவர்கள் உணர்ந்து போற்றினர்கள். தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந் தம், வள்ளலார் திருவருட்பா முதலிய நூல்களிலே அவர்கள் உள்ளத்தைச் செலுத்தி இன்பமடைந்தார்கள். பெரும்பாலும் சமயப்பற்றுடையவர்களே இவ்வாறு தமிழைப் போற்றினர்கள். அவர்களுக்குத் திருக்குறள் தெரியும். நாலடியார்முதலிய நூல்கள் தெரியும். அவற்றின் இணையற்ற உயர் தனிச் சிறப்பும் தெரியும். தமிழ் படிப்பதென்ருல் இவற்றைப் படிப்பதென்றே அன்று இருந்தது. இந்தத் தமிழ், அற நெறியைக் கடைப்பிடிக்க அவர் களுக்கு உதவிற்றேயல்லாமல் ஆங்கிலத்தோடு சரிநிகர் சமானமாகவோ உயர்வாகவோ இருக்கத் தகுதி வாய்ந்தது என்று பெரும்பாலும், யாரும் கருதவில்லை. இந்த அந்தகார நிலையிலே தமிழ்த் தாத்தா உ. வே. சுவாமிநாத ஐயர் அவர்கள் தமது பெருமுயற்சியால் தேடிக் கண்டுபிடித்த சங்க இலக்கியங்களைச் சிறந்த முறையிலே பதிப்பித்து வெளியிட்டார்கள். தமிழர்களுக்குக் கொஞ்சம் நாடித்துடிப்பு வந்தது. உயிர்;இருப்பதைப் போல உணர்ந்தார்கள். என்ருலும் தூக்கம் கலையவில்லை. மயக்கம் தெளிய வில்லை. தாழ்வு மனப்பான்மையைத் தள்ளித் தலை நிமிர முடியவில்லை. இந்த நிலையில்தான் தேசிய இயக்கம் தலை தூக்கியது. எதிலும் நமது பெருமையைத் தேடிப் பார்க்கப் பலர் முயன்றனர். நமது மொழி, நமது சங்கீதம், நமது சிற்பம் நமது கலை என்று பேசத் தொடங்கினர்.