பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று மேலும் முழங்கினர், தமிழர்களின் உடம்பிலே மின்சக்தி பாய்ந்ததுபோல அவர்கள் உணர்ந்து தலை நிமிர்ந்தார்கள். எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி, என்றென்றும் வாழியவே" என்று கவிஞரோடு சேர்ந்து ஒரே மூச்சில் பாடினர்கள். பாரதியாருக்கு முன்பு தமிழின் பெருமையைக் கூறிய வர்கள் இல்லையா என்று வினவலாம். இருந்தார்கள். பெரும் புலவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய புலமை மேருமலை போன்றது. இவர்கள் எல்லாம் தமிழ்ப்பொழில், செந்தமிழ் என்ற உயர்ந்த இலக்கிய ஏடுகளிலே தங்கள் கருத்தைத் திங்கள் தோறும் வெளியிட்டார்கள். வாதப் பிரதிவாதம் செய் தார்கள். பின்னல் செந்தமிழ்ச் செல்வியும் ஒர் அணிகல ளுகச் சேர்ந்து கொண்டது. கொழுத்துன்னுரசி என்பது பற்றி அவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்ட ஒன்றை மட்டும் சான்ருக எடுத்துக் காட்டுகிறேன். தவலரும் தொல் கேள்வித்தன்மையுடையார், இகலிலர், எஃகுடையார் என்று நாலடி புகழ்வதைப் போன்று அவர்கள் வாதம் அமைந்திருந்தன. ஊசிமுனை யிலே நூறு திக்குகளே அவர்கள் கூறும்போது அவர்களு டைய பெரும் புலமையைக் கண்டு வியக்காமலிருக்க முடியாது. ஆனுல் அவர்களுடைய புலமை தமிழ்அறிவு மிக்கவர் களுக்கே பயன்பட்டது. பொதுமக்களை அது கவரவில்லை.