பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 ஈரத்திலேயே நடக்கிரு.ர்கள், ஈரத்திலேயே படுக்கிருர் கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான். ஒயாமல் குளிர்ந்த க்ாற்று வீசுகிறது. தமிழ் மக்களில் பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிரு.ர்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் விதிவசம் என்கிருர்கள். ஆமடா, விதி வசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை என்பது ஈசுவரனுடைய விதி சாஸ்த்ரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி. தமிழ் நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடங்காட்டி வயிறு பிழைத்து வருகிருர்கள். (காற்றுவசன கவிதை.) இனி அவர் நையாண்டி செய்வதற்கு இரண்டொரு எடுத்துக் காட்டுகளை நோக்குவோம்! ஞானரதம் என்ற அவருடைய சிறந்த நூலிலே மண்ணுலகத்தைப் பற்றியும் கூறுகிரு.ர். 'நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர் கள் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத் தொண்டர்; காலணுவின் அடியார்க்கும் அடியார், ஆனல் எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத்