பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 தொண்டரடிப் பொடி யாழ்வார் எங்களெல்லோரைக் காட்டிலும் வாய்ப்பேச்சில் வீரர் ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாம் என்பான். மற்ருெருவன் மணலைக் கயிருகத் திரிக்கலாம் என்பான். ஒருவன் "நாம் இந்த ரேட்டில்-இந்த விதமாகவே-வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப்பெருமை ஆறு மாதத் தில் காற்ருய்ப் போய்விடும்” என்பான். மற்ருெருவன், 'சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிரு.ர். ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்று கிறது” என்பான். தவளை யுருவங்கொண்ட மூன்ஞமொரு வன், ஆறு மாதமென்று சொல்லடா' என்று திருத்திக் கொடுப்பான். தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் பாரதி யார் தமிழர்களை எப்படி நயமாக இடித்துரைக்கிருர் என்று பாருங்கள்! கும்பகர்ணன் தூங்கிளுளும், இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது...அப்படிப் பட்ட சண்டையின் அதிர்ச்சியிலேகூட, குடும்ப கர்ண னுடைய தூக்கம் கலேயவே இல்லை. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னர்கள்; தூக்கம் கலையவில்லை...... மேற்படி கும்பகர்ணனைப் போலே சில தேசங்கள் உண்டு. அந்த தேசங்களிலே வாளம் செய்வோர் மஹா பாவிகள்...... ஆளுல் ஹிந்து தேசம் அப்படி...யில்லே! இங்கு தமிழ் நாட்டைப் பற்றி முக்கியமாகப் பேச வந்தோம்; தமிழ்நாடு மேற்படி மஹாபாதக ஜாபிதாவைச் சேர்ந்ததன்று, அன்று!