பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இவற்றிற்கு அடுத்த இரண்டு வரிகளிலும் தமிழ் நாட்டைப் பற்றி மட்டும் எண்ணிக்கொண்டிராதே, பாரத தேசத்தையும் சேர்த்து எண்ணவேண்டும் என்ற ஒருமைப் பாட்டு உணர்ச்சியையும் உடனடியாகவே பாப்பாவின் உள்ளத்திலே விதைக்கிருர். இதுபற்றி அடுத்த நூலிலே, விரிவாகப் பேசுவேன். ஆகையால் இத்துடன் இங்கு நிறுத்திக் கொள்கிறேன். தமிழர்களுக்கு மகத்தான சக்தி ஏற்படவேண்டும் என்பது பாரதியாருடைய ஆசை. 'தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்யவேண்டுமென்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட் டாகவே நாம் உயிர் தரிக்கின்ருேம். மாதா, இந்த நாட்டு ஜனங்களுக்கு சக்தி யதிகரிக்கும்படி செய்க: அக்காரியத்தை நிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக' என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும் என் கிருர் அவர். பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் அவருடைய அளவற்ற ஆசையை நன்கு வெளிக்காட்டுகின்றது. தமிழும், தமிழகமும் ஓங்கி ஒங்கி விளங்க வேண்டுமென் பதை அக் கடிதம் தெளிவாக நமக்கு வெளிப்படுத்து கின்றது. நமது குறைகளை அவர் ஒரு பக்கம் எடுத்துக் காட்டு வார்; ஆனால் அதே வேளையில் மற்ருெருவன் குறை சொல் வதைப் பொறுக்கமாட்டார். பச்சையப்பன் கல்லுரியில் ஆசிரியராக அக்காலத்தில் பணிபுரிந்த ரோலோ என்பவர் நமது மொழிகள் சயன்ஸ் கற்றுக் கொடுக்கத் தகுதி வாய்ந்தவை அல்ல என்று கூறிஞராம். பாரதியார் எழுதுகிரு.ர். அவருக்கு இவ்விடத்