பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 10. 罗丝 கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு-நல்ல பல்வித மாயின சத்திரத்தின்-மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு-நெஞ்சை அள்ளும் சிலப்பதி கார மேன் ருேர்-மணி யாரம் படைத்த தமிழ் நாடு. (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக-மாகிய தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு தங்கள் புலிக் கொடி மீன் கொடியும்-நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்) விண்ணையிடிக்கும் தலை யிமயம்-எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர் பண்ணிக் கலிங்கத் திருள் கெடுத்தார்-தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ் நாடு. (செந்தமிழ்) சீன மிசிரம் யவன ரகம்-இன்னும் தேசம் பலவும் புகழ் வீசிக்-கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும்-மிக நன்று வளர்த்த தமிழ் நாடு. * . . “ ş (செந்தமிழ்)