பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழ் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தொங்கும் காணுேம்; பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்ருே ? சொல்வீர்! தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலே, உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்ருேம். ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்: இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை; திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும். 2سسه nلسا