பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 4. 5. 4. தமிழ்த் தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக்களிப்பு சந்தம்) ஆதிசிவன் பெற்றுவிட்டான்-என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்ருேர் வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளினுள்ளே-உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையுந் தீயையுஞ் சேர்த்து-நல்ல காற்றையும் வான வெளியையுஞ் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார். சாத்திரங்கள்பல தந்தார்-இந்தத் தாரணியெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்: நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன் நேர்ந்த தனத்துந் துடைத்து முடிப்பான். நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள்ளம்போல்-வையச் சேர்க்கையனேத்தையுங் கொன்றுநடப்பான்.