பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆங்கிலப் பயிற்சி நெல்லை யூர்சென்றவ் ஆணர் கலைத்திறன் நேரு மாறென எந்தை பணித்தனன்: புல்லை யுண்கென வாளரிச் சேயினைப் போக்க்ல் போலவும், ஊன்விலை வாணிகம் நல்ல தென்ருெரு பார்ப்பனப் பிள்ளையை நாடு விப்பது போலவும், எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க் கிங் கருவருப் பாவதை (1) நரியு யிர்ச்சிறு சேவகர் தாதர்கள் நாயெ னத்திரி யொற்றர் உணவினைப் பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும் பேடி யர்பிறர்க் கிச்சகம் பேசுவோர் கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங் கலைப யில்கென வென்னை விடுத்தனன்; அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் வற்பர் கல்வியி னெஞ்சு பொருந்துமோ? (2) கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்.பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார் அணிசெய் காவிய மாயிரங் கற்கினும் ஆழ்ந்தி ருக்குங் க்வியுளம் காண்கிலார் வணிக மும்பொரு னுாலும் பிதற்றுவார் வாழு நாட்டிற்பொருள்கெடல் கேட்டிலார் துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லு வாரெட்டுணைப்பயன் கண்டிலார். (3)