பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கம்ப னென்ருெரு மானிடன் வாழ்ந்ததும் காளி தாசன் கவிதைபு னைந்ததும் உம்பர் வானத்துக் கோளையு மீனையு மோர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்ப ருந்திற லோடொரு பாணினி ஞால மீதிலி லக்கணங் கண்டதும் இம்பர் வாழ்வி னிறுதிகண் டுண்மையின் இயல்பு ணர்த்திய சங்கர னேற்றமும் (4) சேரன் தம்பி சிலம்பை யிசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார வித்ததுந் தர்மம் வளர்த்ததும் பேர ருட்சுடர் வாள்கொண்ட சோகனர் பிழை படாது புவித்தலங் காத்ததும் வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் (6) அன்ன யாவு மறிந்திலர் பாரதத் தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்; முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளி னிகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்: என்ன கூறிமற் றெங்க னுணர்த்துவேன் இங்கி வர்க்கென துள்ள மெரிவதே! (6)