பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தமிழச்சாதி விதியே, விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தா யெனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாந் தகத்தக மாறித் தன்மையுந் தனது தருமமு மாயா தென்றுமோர் நிலையா யிருந்து நின்னருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற் றுள்ளுறு தருமமு முண்மையு மாறிச் சிதைவுற் றழியும் பொருள்களிற் சேர்ப்பையோ? *அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனே? மாளிகை விளக்கோ ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே தமிழச் சாதியை யெவ்வகை விதித்தா யென்பதன் மெய்யெனக் குணர்த்துவாய் ஏனெனில், 'சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும், திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவு மழகுங் கருதியும், 'எல்லை யொன்றின்மை யெனும் பொருளதனைக் கம்பன் குறிகளாற் காட்டிடமுயலு முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழச் சாதியை யமரத் தன்மை வாய்ந்தது வென் றுறுதி கொண்டிருந்தேன். ஒரு பதியிைரஞ் சனிவாய்ப் பட்டுந் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி யுழைத்திடு நெறிகளைக் கண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்.