பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும். இவர் தாம்உடலு முளளமுந் தம் வசமிலராய் நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும். பெரிதிலை; பின்னும் மருந்திதற்குண்டு. செய்கையுஞ் சீலமுங் குன்றிய பின்னரும் உய்வகைக்குரிய வழி சில வுளவாம், மற்றிவர், சாத்திரம்-(அதாவது, மதியிலே தழுவிய கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்)ஈங்கிதிற் கலக்க மெய்திடு மாயின் மற்றதன் பின்னர் மருந்தொன் றில்லை. இந்த நாளெமது தமிழ் நாட்டிடையே அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார் தம்மிலே யிருவகை தலைப்படக் கண்டேன்: ஒரு சார், மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின் செய்கையு நடையுந் தீனியு முடையும் கொள்கையு மதமுங் குறிகளு நம்முடை யவற்றினுஞ் சிறந்தன; ஆதலி னவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால், தமிழச் சாதி தரணி.மீ திராது. பொய்த்தழி வெய்தல் முடி' பெனப் புகலும். நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவ மெனிலோ . "ஏ ஏ அஃதுமக் கிசையா தென்பர் *உயிர் தருமேற்றிசை நெறிகளை யுவந்து நீர் தழுவிடா வண்ணம் தடுத்திடும் பெருந்தடை பல. அவை நீங்கும் பான் மையவல்ல' என்றருள் புரிவர். இதன் பொருள் சீமை