பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵፬ மருந்துகள் கற்ற மருந்துவர் தமிழச் சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்' என்பதேயாகும். இஃதொரு சார்பாம். பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு 'நமது மூதாதையர் நாற்பதிற்ருண்டின் முன்னிருந்தவரோ, முந்நூற்ருண்டிற் கப்பால் வாழ்ந்தவர் கொல்லோ, ஆயிரம் ஆண்டின் முன்னவரோ, ஐயாயிரமோ ? பவுத்தரே நாடெல்லாம் பல்கிய காலத் தவரோ ? புராணமாக்கிய காலமோ ? சைவரோ? வைணவ சமயத்தாரோ ? இந்திரன்ருனே தனி முதற் கடவுள் என்று நம்முன்னே ரேத்திய வைதிகக் காலத்தவரோ? கருத்திலா தவர் தாம் எமது மூதாதைய ரென் பதிங் கெவர்கொல் ? நமது மூதாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமு நடையுங் கிரியையுங் கொள்கையும் ஆங்கவர் காட்டிய வவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு: எனிலது தழுவ லியன்றிடா வண்ணம் கலி தடைபுரிவன், கலியின் வலியை வெல்ல லாகா தென விளம்புகின் றனரால். நாசங்கூறு நாட்டு வயித்தியர்' இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியி னிடையே நம்மவ ரெப்படி யுய்வர்? விதியே! விதியே! தமிழச் சாதியை யென் செயக் கருதி யிருக்கின்ருயடா..?