பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நெல்லையப்பருக்குக் கடிதம். 19ులిడి) 1915 ஒம். 19—7—1915 என தருமைத் தம்பியாகிய பூரீ நெல்லையப்பபிள்ளை யைப் பராசக்தி நன்கு காத்திடுக. தம்பி-மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரை விலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிேறன். 粤 事 io நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே கடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்து விட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும்.வேறு வழியில்லை. ஹா! உனக்கு ஹிந்தி மராட்டி முதலிய வட நாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்தப் பாஷைப் பத்திரிகைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரில் தெரிந்து கொள்ள முடியுமானல் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும்; தமிழ் தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே