பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கடமையாகக் கொள்க. ஆனல் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும். 率 寧 拳 தம்பி- நான் ஏது செய்வேனடா: தமிழை விட மற் ருெரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்ருெரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக்காட்டிலும் மற்ருெரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண் படுகிறது. தம்பி-உள்ளமே உலகம். ஏறு ஏறு! ஏறு மேலே, மேலே! மேலே நிற்கும் நிலை யிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் க்ண்டு குடல் குலுங்கச் சிரி. உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்துபோ. பற! பற! மேலே, மேலே, மேலே. 事 鄰 寧 தம்பி, தமிழ் நாடு வாழ்க என்றெழுது. தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ் நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் மலிக என்றெழுது, அந்தத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களிலே நவீன கலைக ளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது. தமிழ் நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது. ஆணும் பெண்ணும் ஒருயிரில் இரண்டு கலைகள் என்றெழுது.