பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழ் 3 ஏப்ரல், 1916 கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் மாடன் ரெவ்யூ" என்ற மாதப் பத்திரிகையின் தை. மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுது போக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் பூரீ நீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிரு.ர். ஏற்கெனவே மேற்படி பத்திரிகையில் பூரீயதுநாத ஸ்ர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து பூரீஐயர் தமது கருத்துக்களை வெளியிட்டார். கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண் தொல்லேயாக முடிகிறதென்றும் தேச பாஷைகளிலே கற்றுக் கொடுத் தால் நல்ல பலன் விளையு மென்றும் பூரீ ஸ்ர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்தியைச் சொன்னர். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்லுகிருர்:'பாஷைத் தொல்லை பெருந்தொல்லையாகவே இருக்கிறது. ஆளுல் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷி லே கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிகம் பயன்படுமென்று சொல்வதற் கில்லை. எனது மாளுக்கர்களிலே பெரும்பார்லோ இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் நிறையச் செய்தபோதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலி ைஷ நன்முக எழுதுகிரு.ர்கள். சரித்திர