பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலிஷ் தான் தமிழைக் காட்டிலும் நன்முகச் சொல்ல வருகிறது.” இங்ங்னம் எழுதுகிற ரீநீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலே தான் பார்த்தோம். புதுமை ! புதுமை ! ! புதுமை ! ! ! மேலும் இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப் போளுர் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார் வேக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமை யிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போது தான் ஹிந்து ஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக் கின்றன; நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக் கிரு.ர்கள்; கவிகள் இருக்கிருர்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத்தார் தெரிந்து கொள்ளும்படி செய்து வருகிரு.ர்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ் தான வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மில் சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப் புண்டாக்குகிறது. என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். உலகத்திலுள்ள -- ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிருேம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே in-3