பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

会尘 அதிக மாறுதல் பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரி கத்தை அனுசரித்து வருவதாயிற்று. எனினும், மலேயாளத்துப் பழக்கம் ஒரு போதும் நீங்கவே யில்லை. மலைநாட்டு ஆண் மக்கள் உலமெங்கும், புலி, கரடி, ஓநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடி யும், மலைவெப்பத்துக்கும் மலே மழைக்கும் மலைப்பணிக்கும் மலைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிழைக்க வேண்டி யவர்களாதலால், மைதானங்களில் வாழும் ஜனங்களைப் போல் ஸ்த்ரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில் லாமல் அவர்களேத் தயவுடனும், மதிப்புடனும் நடத்து வது வழக்கம். ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப் பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக்காட்டிலும் ஸ்வதந்திர முடையோராக வாழ்ந்து வருகின்றனர். மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி, சொத்து டைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விதமான மலையாள நாகரிகத்துள் நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப்பதனின்றும், தமிழ் நாட்டு நாகரிகமும் இங்குள்ள மாதர்களுக்கு- ஹிந்து தேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களைக் காட்டிலும் - அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. முகம் மதிய நாகரிகத்தின் ஆதிக்கம் பலமடைந்திதின்றும் வட இந்தியாவில் மேல் ஜாதி ஹிந்து ஸ்திரீகள் கோஷா என்ற முகம்மதிய வழக்கத்தைக் கொள்ளும்படி ஏற் பட்ட காலத்திலே கூட, தமிழ் நாட்டிலும் அதன் நாகரி கத்தைத் தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடு களிலும் அந்த வழக்கம் உண்டாகவில்லை. மேலும் உலகத்திலுள்ள மாதர்களுக் கெல்லாம் நீதி ஆண் மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு