பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மாதரும் ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொது வான ஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரேயாயினும் ஜன ஸ்மூஹ நீதிகளின் விஷயத்தில் தமிழ் நாட்டில் எப்போதும் ப்ரமாணமாக இயன்று வருவது ஒளவையின் நீதி வாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம், ஆண் மக்களிலேகூட உயர்ந்த கல்வி பயின்ருேர் மாத்திரமே ஜன ஸ்மூஹ விஷயங்களில் வள்ளுவர் குறள், நாலடியார் முதலியவற்றை ப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப் பில்லாதவர்களும் படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் பெண் அனைவருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி. தமிழ் ஜனங்கள் பெரும்பான்மை யோருக்கு சுமார் சென்ற இரண்டாயிரம் வருஷங்களாக ஒளவையாரின் நீதியே ப்ரமாணமாக நடைபெற்று வருகின்றது. ஸாமான்ய ஜனங்கள் ஒளவை நீதியைக் கொண்டாடி வருகிருர்களெனில், கற்ருேரும் அரசரும் அதைப் புறக் கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்ருே ருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப் பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனல், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஒளவையால் இயற்றப்பட்டன அல்ல வென்றும் சுமார் ஆயிரம் வருஷங் களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஒளவையால் செய்யப் பட்டன என்றும் ஒரு கட்சியார் சொல்லுகிரு.ர்கள். ஒளவையார் வெறுமே நூ லாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜநீதிபில் மிகவும் வல்லவ ரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் துரதில் நியமனம் பெற்றிருக்கிருர். மேஆம்