பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அவர் சிறந்த ஆத்ம ஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார். "மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு' அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, க்பட மற்ற, குற்றமற்ற, பகையற்ற எண்ணங்களே நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை, அதாவது சாகாத்தன்மை (அமரத்தன்மை) விளங்கும் என்றும் பொருள்படுவது. இந்தக் குறள் பாடியவர் ஒளவையார். இவர் தாமே நெடுந்துாரம் இக் கொள்கைப்படி ஒழுகியவ ரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது. ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத் தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரிகத் துக்கு ஷேக்ஸ்பியர் முதலிய மஹா க்வியின் நூல்களே அளவுக் கருவியாகக் கருதப்படுகின்றன. நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமேயன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் ஒருப் படமாட்டோம் என்று நாம் மறுமொழி சொல்வோ மென்று மெக்காலே என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகிரு.ர். இந்த மாதிரியாகப் பெருமைப் படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்: சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்: இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர் திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம் அனைவரி லும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்ட ஒளவைப் பிராட்டி