பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு மேலவைத் தலைவர் மாண்புமிகு ம. பொ. சிவஞானம் அவர்கள் அளித்த அணிந்துரை இந்நூலாசிரியர் திரு. பெரியசாமித் தூரன் அவர் கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணிகள் சரித்திரச் சிறப்பு மிக்கவையாகும். தமிழில் 10 தொகுதி களாக கலைக் களஞ்சியம் வெளி வந்ததற்கு இவருடைய அரும்பணியே அடிப்படையாக அமைந்ததெனலாம். தமிழின்மீது கொண்ட பற்றுக் காரணமாக, தமிழ்த் தாய் பெற்ற புலவர்களிடமும் இவருக்குத் தளராத பக்தி உண்டு. புலவர்களேத் தரம் அறிந்து போற்றும் திறமும் உண்டு. அந்த வகையில் பாரதியைத் தம் வழி காட்டியாகக் கொண்டு இவர் வாழ்க்கை நடத்தி வருகிரு.ர். இவருடைய தேச பக்திக்கும் தாய் மொழிப் பற்றுக்கும் பாரதிதான் ஆசான். அந்த ஆசானின் தமிழ்ப் பற்றையும், தமிழ் இனப் பற்றையும், தமிழ்நாட்டுப் பற்றையும் அவருடைய எழுத்தோவியங்களைக் கொண்டே இந்நூலில் அறிமுகப் படுத்துகிருர் ஆசிரியர் தூரன். பாரதியாரின் கவிதைகளிலும், க ைத க ளி லு ம். கட்டுரைகளிலும் காணப்படும் தமிழ் மாணிக்கங்களை யெல்லாம் தொகுத்து நூல்வடிவில் ஒரு மாலையாக்கித் தந்துள்ளார்,