பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 ஒளவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத்தொழிலே உயர்ந்த கவிராசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வ சக்தி பெருத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப் படாத தொழில் என்றும் கருதுகிருர்கள். இந்த அற்புத தொழிலிலும் ஒளவை நிகரற்ற திறமை வாய்ந்தவள். புருஷார்த்த்ங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்த தினின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன் களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதாகையால் அதனை விரித்துக்கூற முயலாமல், அதற்குச் சாதனமாகிய தெய்வ பக்தியை மாத்திரம் முதல் அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த் தங்களையும், விளக்கி, திருவள்ளுவநாயனர் முப்பால்’ (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருடைய திருக்குறள் செய்தருளினர். ஆயிரத்து முன்னுாற்று முப்பது சிறிய குறட் பாக்களில் நாயனர் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஒளவைப் பிராட்டி வீட்டுப் பாலையும் கூட்டி நன்கு புருஷார்த்தங்களே யும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினர். இந்த ஆச்சரியமான வெண்பா பின்வருமாறு: 'ஈதலறம், தீவினை.வீட்டிட்டல் பொருள்; எஞ்ஞான்றும் காதலிருவர் கருத்தொருமித்-தாதரவு பட்டதே இன்பம், பரனே கினைந்திம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.: இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல்அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும்.