பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ba தானுள்ளது என்பது அக்குறளின் பொருள். இதனுடன் உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பமளிப்ப தல்ை காதலின்பம் இவ்வுலக இன்பங்களனைத்திலும் தலைமைப்பட்ட தாயிற்று. ஆதலால் நான்கு புருஷார்த் தங்களுள் அதாவது மனிதப் பிறவி எடுத்ததல்ை ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக் கணக்கிடப் புகுந்த இடத்து நம் முன்னேர் காதலின்பத்தையே இன்பமென் னும் பொதுப் பெயரால் சொல்லியிருக்கிரு.ர்கள். இங்ங்ணம் இன்பமென்ற பொதுப் பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ்சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகும் என்பதையும், அவ்வின்பத்தை தவறுதலின்றி நுகர் தற்குரிய வழியின்னதென்பதையும் ஒளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ் சொற்களிலே காட்டி அருள் புரிந்திருக் கிரு.ர். ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத் திலும் மனத்தாலும் வாக்காலும் செய்கையாலும் கற்பு நெறி தவருமல் நித்தியப் பற்றுதலுடையோராய் மன ஒருமை யெய்தித் தம்முள் ஆதரவுற்றுத்துய்க்கும் இன்பமே இன்பமெனத் தகும் என்று ஒளவையார் கூறுகிரு.ர். இனி, முக்தியாவது யாதெனில்-கடவுளே உள்ளத்தி லிருத்தி, தானென்ற கொள்கையை மாற்றி ஈசபோதத்தை யெய்தி, மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் பொறுப்பு நீங்கியிருப்பதே முக்தி. இந்த முக்தி பெறுவ தல்ை ஒருவன் மற்ற மூன்று புருஷார்த்தங்களிலும் எவ் விதமான லம்பந்தமுமில்லாமலே செய்கையற்று மடிந்து கிடப்பானென்றெண்ணுதல் பெருந் தவறு. உயிர் உள்ள வரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங் கொடாது. யாவனயினும் (மனத்தா லேனும் வாக்காலேனும்,உடம்பாலேனும்) யாதேனுமொரு விதமான செய்கை செய்துகொண்டிராமல் சும்மாயிருத்தல்