பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஒரு rணங் கூட ஸாத்தியப்படாது. இயற்கையிலே பிறக் கும் குணங்களால் ஒல்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற் புறுத்தப்படுகிருன்' என்று கண்ணபிரான்பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிருர், இன்னும் ஒளவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்களை உதாரணம் காட்டி அவருடைய மகிமைகளை யெல்லாம் விளக்கிக் கூற வேண்டுமாயின் அதற்கு எத்த னையோ சுவடிகள் எழுதியாகவேண்டும். நமது வியாசமோ ஏற்கெனவே மிகவும் நெடிதாய்விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக் குறித்துத்தற்காலத்தினர்தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமான, எனக்குத் தோன்றுவனவற்றை மற்ருெரு வியாலத்தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன். தமிழ் நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத் துமுரிய சகோதரிகளே. இத்தனை பெருமை வாய்ந்த தமிழ் நாகரிகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளை யும் பொறுத்திருக்கிறது. பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ் செல்வமுடைய சேம நிதியொன்றுக்கு கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கின்ருன்..மனித உலகமோ இந்த நேரத்தில், பிரமாண்டமான சண்ட மாருதங் களைப் போன்ற மாறுதல்களாலும் கிளர்ச்சிகளாலும், புரட் சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறு தோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும் தத்தளிக்கிறது. இந்த மஹா ப்ரளய காலத்தில் தமிழ் நாகரிகம் சிதறிப் போகாதிருக்கும் படி கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ங்னம் சிதரு மலிருக்குமாறு தகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்திகளாலும் அதைக் காப்பாற்றக்கூடிய திறமையை உங்களுக்கு பர ப்ரம்மம் அருள் செய்க.