பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Ꮾ எழுத வேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது. வெளியூர்களிலுள்ள 'ஜனத்தலைவரும் ஆங்கில பண்டித "சிகாமணிகளும் தமிழ்ப் பத்திரிக்ைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக் காரியங்களையும், அவரவர் மனதில் படும் புது யோசனைகளே யும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத்தலைவர் களால் இக்காரியம் செய்ய முடியாத பrத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும். நூலாசிரியர் பாடு பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிகமென்று சொன் னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங் களை ஈசனே தீர்த்துவைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலீஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழிபெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிரு.ர்கள். அல்லது, இங்கிலீஷ் முறை யைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புது நாவல் கள் எழுதுகிருர்கள்: அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுது வோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிருர்கள். இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை; அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக் காணும்போது அதில் ரஸ் மனுபவிக்க வழியில்லை. இங்கிலீஷ் படித்த 'ஜனத்தலைவர்' காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும்படியான நிலைமை