பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாரதியாரின் விழாக்களிலேயும், பட்டிமன்றங்களி லேயும் அந்த மகாகவியைப் பற்றிப் பேசும் இளைஞர் களுக்கும், பத்திரிகைகளிலும் நூல்களிலும் பாரதியைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர்களுக்கும் இந்நூல் பயன் படுவதாகும். பல மணி நேரத்தைச் செலவழித்து உடல் நலம் குன்றியுள்ள நிலையிலும் உழைத்து, பாரதியாரின் எழுத்துக்களைத் துருவித் துருவி ஆய்ந்து இந்நூலைத் தந்துள்ளார். அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். இத்தகைய தமிழ்ப் பணிகளே பிணியின் மத்தியிலும் அவரை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. அவர் இன்னும் நெடுங்காலம் வாழப் பிரார்த்திக்கின்றேன். வானதி பதிப்பக உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்கள், சான்ருேர் பலருடன் தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்தோவியங்களை நூல்களாக வெளியிடு வதில் தனி ஆர்வமுடையவர். இப்படி எத்தனையோ நூல் களை தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அவர் சேர்த்துள்ளார். இந்நூலை வாங்கி, அவரைத் தமிழ் மக்கள் ஊக்குவிக்க வேண்டும். தமிழரிடையே தேசபக்தியானது கு ன் றி யும் குறைந்தும் வரும் இந்நாளிலே, அதனை ஊக்கி வளர்ப் பதற்கு இந்நூல் பயன்படும் என்று நம்புகிறேன். வாழ்க, பாரதியின் புகழ்! வாழ்க, தமிழ் மொழி! ம. பொ. சிவஞானம்