பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மற்ருெரு பெயரென்றும், ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்ல வென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ள வில்லை. மேலும் அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத் துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ் மகுட மொன்று சூட்டியிருக்கிறது. ருஷியாவின் நிலைமை’ “The Situation, in Russia,”“Amilliusrou? or pavuomââ &ός*) Liu? fùpó****The Vernaculars as media of instruction', ஆஹா! நான் மாற்றி யெழுதுகிறேன். தமிழை முதலாவது போட்டு, இங்கிலிஷைப் பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படி யில்லை. இங்கிலீவுை முன்னே போட்டு தமிழைக் கீழே போட்டிருக்கிறது. அமெரிக்க ஸ்த்ரீ பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை எழுதுகிறது 'American woman“ “ gy@uoffisegir giv#ff,” “Our Mathadhipaties.” 'நமது மடாதிபதிகள்,' என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா? இங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத் திருத்தத் தலைவர் முதலியவர் களின் உபந்யாசங்களையும் பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்த மான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகையிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனல் அந்த மொழிபெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங் களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆளுல் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான