பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இங்ங்ணம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், சேலத்தில் வக்கீல் பூரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாசார்யரும், பூரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி யிருக் கிரு.ர்கள். இந்தப்பத்திரிகையின் பெயர் தமிழ் சாஸ்திரபரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை. மேற்கண்ட பெய ருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் கார்யஸ்தர், அந்த ஊர்க்காலேஜில் ப்ரகிருதி சாஸ்தர பண்டிதராகிய பூரீ ராமநாதய்யர். தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிகை என்ற சேலத்துப் பத்திரிகையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழருக்கு வேண்டிய இக்காரியத் தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்ட தற்கு பூரீ ராஜகோபலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனல் கூடிய சிக்கிரத்தில் தமிழ்ப்பகுதி யொன்று அந்தப் பத்திரிகையில் சேருமென்று தெரிகிறது. அநேகமாக இரண்டாம் ஸஞ்சிகையிலேயே சேருமென்று கேள்விப்படு கிறேன். அங்ங்ணம், சேர்ந்து நடக்கும் சாஸ்திரப் பத்திரிகை யினால், தமிழ் நாட்டாருக்கு மிகப் பெரிய பயன் விளையு மென்பதில் சந்தேகமில்லை. பரிபாஷை சேகரிக்க ஒருபாயம் பூரீ காசியிலே, நாகரி ப்ரசாரிணி சபையார் ஐரோப் பிய லங்கேதங்களை யெல்லாம் எளிய ஸம்ஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரியதோர் அகராதி உண் டாக்கி வருகிருர்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்ற வரை, தேச பாஷைகள் எல்லாவற்றிலும்