பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தமிழ் வசன நடை தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சி செய்யவேண்டும். கூடியவரை பேசுவதுபோலவே எழுது வதுதான் உத்தமமென்பது என்னுடைய கr. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாக வே அமைந்துவிட்டால் நல்லது. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந் தேகமில்லை. ஆலுைம் ஒரு வழியாக முடிக்கும்போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லா மல், நடை நேராகச் செல்லவேண்டும் முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும்திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு ஸங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடிந்த வசனங்களேயே எழுதுவது நன்று. உள்ளத் திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால், கை பிறகு தான கவே நேரான எழுத்து எழுதும், தைர் யம்இல்லாவிட்டால்