பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தமிழருக்கு தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக் கிருர்கள். தெய்வங்கண்ட கவிகள், அற்புதமான ஸங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிரு.ர்கள். அச்ச மில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிருர்கள். கண்ணை நன்ருகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார், ஒரு நிலைக் கண்ணுடியிலே போய்ப் பார். நமது நாட்டு ஸ்திரீகளிலே பல சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிருர்கள். ஒளி, சக்தி, வலிமை, வீர்யம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன. தமிழா, பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய். ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே ஜாதியிரண் டொழிய வேறில்லை என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேத மாகக் கொள். பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை "வாழ்க்கைத் துணை' என்ருர்: ஆத்மா வும் சக்தியும் ஒன்று. . ஆணும் பெண்ணும் சமம்.