பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறர்க்கும் நீ செலுத்தவேண்டிய கடமை, பிறர் என்பதனுள் வையகம் முழுதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும். பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறு தல் இனப்பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இச் செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை. இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண், பாட்டு, கூத்து முதலிய ரஸ் வஸ்துக்களை அனுபவிப்பது. இவ் வின்பங்க்ள் எல்லாம், தமிழா, உனக்கு நன்முக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகு முடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக. வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. விடு" என்ற சொல்லுக்கு விடுதலை’ என்பது பொருள். மேற்கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானகவே வீட்டு நிலை யருள் செய் வான். தமிழா, உனது புருஷார்த்தங்கள் கை கூடுக!